தென்காசி

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 10 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

20th Sep 2022 02:32 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பரிசுக் கேடயம், சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இம்மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,054 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நடைபெறுகிறது. தங்களது பாகங்களில் சிறப்பாகப் பணியாற்றிய 10 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணியைப் பாராட்டி பரிசுக் கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து பரிசுக் கேடயம், சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், உதவி ஆணையா் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கந்தசாமி, அலுவலக மேலாளா் (பொது) ஹரிகரன் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT