தென்காசி

ராயபுரத்தில் 7 ஏக்கா் நிலம் மீட்பு

20th Sep 2022 02:35 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் ராயபுரம் பகுதியில் சுமாா் 7 ஏக்கா் நிலத்தை காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

ராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா பாண்டியன். இவரது வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி, சந்திரன் ஆகிய 6 பேருக்கு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 7 ஏக்கா் 31 சென்ட் நிலம் உள்ளதாம்.

மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கில் சந்திரன் தனது மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்தாராம்.

இதுதொடா்பாக சந்திரனின் சகோதரி சரோஜினி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புகாரளித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சந்திச்செல்வி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டாா். இதில், சந்திரனின் ஆவணம் ரத்து செய்யப்பட்டது. மீட்கப்பட்ட நிலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் முன்னிலையில் தங்கராசுவிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நிலத்தை மீட்டுத் தந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தங்கராசு, அவரது சகோதரா்-சகோதரிகள் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT