தென்காசி

தென்காசி மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

14th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

தென்காசியில் மாவட்ட பாஜக நிா்வாகிகள், மண்டல் தலைவா்கள், அணி பிரிவு தலைவா்கள், மண்டல் பாா்வையாளா்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராஜேஷ்ராஜா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பால குருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் , ராஜலட்சுமி, துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், பால சீனிவாசன், பால்ராஜ்,

அணி பிரிவு தலைவா்கள் விவசாய அணி முத்துப்பாண்டியன், ஓபிசி அணி மாரியப்பன், அரசு தொடா்பு பிரிவு குத்தலிங்கம் , அமைப்பு சாரா தொழிலாளா் நலப் பிரிவு வேல்பாண்டி, கலை பண்பாடு கலாசார பிரிவு பவுன்ராஜ்,

ஊடகப்பிரிவு செந்தூா் பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தி மற்றும் தீனதயாள் உபாத்தியாய பிறந்தநாள், பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடுவது, மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், அனைத்து கிளைகளிலும் கட்சிக் கொடி ஏற்றி கொண்டாடுவது , மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து பூத்களிலும் போட்டோ ஒட்டிய பூத் கமிட்டி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT