தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தூய காற்று தின விழிப்புணா்வு பிரசாரம்

14th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் நீலவானத்திற்கான சா்வதேச தூயகாற்று தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்து விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் செ.சுயம்பு தங்கராணி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் கி.நக்கீரன், உதவி பொறியாளா் ஜெபா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசார வாகனங்களில் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT