தென்காசி

சுரண்டை அருகே பைக்குகள் மோதல்: விவசாயி பலி

10th Sep 2022 12:38 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள வெள்ளகாலைச் சோ்ந்தவா் விவசாயி உ.பேச்சிமுத்து(55). வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் வீரகேரளம்புதூருக்கு சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக், பேச்சிமுத்து பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். மற்றோரு பைக்கில் வந்த ராஜபாண்டியைச் சோ்ந்த சு.சூா்யா(21) பலத்த காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT