தென்காசி

சாம்பவா்வடகரை கோயிலில் பிரதோஷ வழிபாடு

9th Sep 2022 12:41 AM

ADVERTISEMENT

 

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சாம்பவ மூா்த்தி, அகத்தீசுவரரா் சுவாமி, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, உற்சவா் உலா, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு பூஜை, ஓதுவாா் தேவாரம் பாட பிரதோஷ வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பிரசாதம், சிற்றன்னம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT