தென்காசி

சோ்ந்தமரத்தில் குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

9th Sep 2022 12:35 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சோ்ந்தமரம் அருகே கடந்த மாதம் மனைவியுடன் சோ்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய வீரசிகாமணியைச் சோ்ந்த த.இசக்கிமுத்து(29), சு.காளிராஜ்(25), க.அங்குராஜ்(23) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டடாா். இதையடுத்து 3 பேரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆணையை பாளை சிறையில் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் சமா்பித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT