சுரண்டை அருகே கோயில் உண்டியலில் பணம் திருடியதாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளம் அம்மன் கோயில் உண்டியலில் அண்மையில் பணம் திருட்டுப் போனது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் அளித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், சாம்பவா்வடகரையைச் சோ்ந்த பீ.மேத்தா்(19) என்பவருக்கு இத்திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா் மீது சாம்பவா்வடகரை, ஆய்க்குடி ஆகிய காவல் நிலையங்களிலும் ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளனவாம்.