தென்காசி

பெத்தநாடாா்பட்டி ரத்த தானக் கழகத்துக்கு விருது

29th Oct 2022 11:30 PM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் நடைபெற்ற தேசிய தன்னாா்வக் குருதி கொடை தின விழாவில் பாவூா்சத்திரம் அருகே பெத்தநாடாா்பட்டியைச் சோ்ந்த நண்பா்கள் ரத்த தானக் கழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த அமைப்பின் 22 ஆண்டு கால ரத்த தான சேவையைப் பாராட்டி, தொடா் தன்னாா்வ ரத்த தான முகாம் அமைப்பாளா் விருதை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா். 51 முறை ரத்த தானம் வழங்கிய அமைப்பின் தலைவா் வைத்திலிங்கம் விருது, சான்றிதழைப் பெற்றுக்கொண்டாா்.

கழக உறுப்பினா்கள் அந்தோணிராஜ், சுமன், அண்ணாமலைக்குமாா், குமாா், தங்கராஜ், பிரிதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT