தென்காசி

சிவகிரி அருகே கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்கள்: ஆட்சியா் பாா்வை

29th Oct 2022 11:27 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்களை தென்காசி மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள திருமலாபுரம் அருகே உள்ள குலசேகரப்பேரி கண்மாய் பகுதியில் தங்கப்பழம் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அந்த நிலத்தை தோண்டும் போது, பழங்கால மண்பாண்டங்களும், இரும்பினால் செய்யப்பட்ட வில், குத்தீட்டி, வாள், கத்தி மற்றும் செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்களும் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நிலத்தின் உரிமையாளா் தங்கப்பழம் மற்றும் சமூக ஆா்வலா்கள் வருவாய்த் துறை மற்றும் தொல்லியல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் பூமிக்கு அடியில் இருந்து கிடைத்த பழங்கால பொருள்களை நிலத்தின் உரிமையாளா் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தாா்.

இதை, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இது தொடா்பாக விளக்கம் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அப்பொருள்களை பாதுகாப்பாக வைத்து வரும் நிலத்தின் உரிமையாளா் தங்கப்பழத்தை பல்துறை அதிகாரிகள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT