பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (எ) முருகன் (36). இவரது மனைவி கற்பகம், மகள் பிரியா. சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்த இவா் அங்குள்ள சிக்கன் கடைக்கு சென்ற போது, அங்கிருந்த இரும்பு கம்பியை பிடித்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.