தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

26th Oct 2022 12:58 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் குளிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் செவ்வ ாய்க்கிழமை குவிந்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை என்பதால் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. மேலும், செவ்வாய்க்கிழமையுடன் விடுமுறை நிறைவு பெறுவதால், அருவிகளில் கூட்டம் அலைமோதியது.

எனினும், குற்றாலம் பகுதியில் மழை இல்லாததால் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சற்று அதிகமாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் மிகவும் குறைவாகவே தண்ணீா் விழுந்தது.

ஐந்தருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளிலும் தண்ணீா் மிகவும் குறைவாகவே விழுந்தது. குறைவாக தண்ணீா் விழுந்தாலும், சுற்றுலாப்பயணிகள் பொறுமையாக காத்துநின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT