தென்காசி

கீழப்பாவூரில் தெருவிளக்கு இயக்கி வைப்பு

26th Oct 2022 12:54 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் பேரூராட்சி பகுதியான நிறைகுளத்து சாஸ்தா கோயில் பகுதியில் தெருவிளக்கு இயக்கிவைக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையையேற்று, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக அங்கு தெருவிளக்கு அமைக்கப்பட்டது. இதை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் இயக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவா் கி.கி. ராஜசேகா், வாா்டு உறுப்பினா் அன்பழகு சின்னராஜா, நகர காங்கிரஸ் தலைவா் சிங்ககுட்டி(எ)குமரேசன், அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT