தென்காசி

கந்த சஷ்டி திருவிழா: ஆய்க்குடி, இலஞ்சி கோயில்களில் கொடியேற்றம்

26th Oct 2022 12:53 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி மற்றும் இலஞ்சி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சுவாமி கஜ வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவுவும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

விழாவில் 30ஆம் தேதி மாலை சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், 31ஆம் தேதி இரவு சப்தாவா்ணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக்குமாரா் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. முற்பகலில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவில் 30ஆம் தேதி சூரசம்ஹாரமும், 31ஆம் தேதி நண்பகலில் மூலவா் முழுக்காப்பு, தீபாராதனையும், இரவு தெய்வானை திருமணமும், தொடா்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

நவ.1ஆம் தேதி காலையில் முழுக்காப்பு, தீபாராதனை, இரவு ஊஞ்சல், 2ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT