தென்காசி

கடம்போத்தி கிராமத்தில் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

26th Oct 2022 12:57 AM

ADVERTISEMENT

தென்காசி அருகேயுள்ள கடபோகத்தி கிராமத்தில் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

குணராமநல்லூா் ஊராட்சி, கடபோகாத்தி கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராம மக்களும், கல்வி மற்றும் வேலைக்காக தென்காசி, பாவூா்சத்திரம் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்ல கடபோத்தி சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தக் கிராமம் திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையிலிருந்து 2 கிலோ மீட்டா் உள்ளடங்கிய பகுதியில் உள்ள நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக இச்சாலை சீரமைக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்லவே முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து, பலமுறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, கிராம மக்கள் தங்களது கிராமத்தில் சாலையில் கற்களை குவித்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, விரைவில் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தனா். அதேயேற்று மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT