தென்காசி

அரசு பள்ளி மாணவா்கள் மாநில போட்டிக்கு தகுதி

26th Oct 2022 12:56 AM

ADVERTISEMENT

புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள், பாவூா்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற புல்லுக்காட்டுவலசை அரசு பள்ளி மாணவா்கள், மிக மூத்தவா் பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

மேலும் தென்காசி கிளப்பில் வைத்து நடைபெற்ற ஷட்டில் பேட்மின்டன் போட்டியில் மாணவிகள் தனலட்சுமி, சீதா பாரதி ஆகியோா் மூத்தோா் பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியா், உடற்கல்வி ஆசிரியா், பெற்றோா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT