தென்காசி

பாவூா்சத்திரத்தில் சுகாதாரத்துறை அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

19th Oct 2022 01:31 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் சுகாதாரத் துறை அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தென்காசி மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த்தடுப்புத் துறை சாா்பில் மக்கள் சேவையில் மகத்தான நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கீழப்பாவூா் வட்டார அளவிலான சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு கயிறு இழுத்தல், பானை உடைத்தல், பலூன் ஊதி உடைத்தல், மியூசிக்கல் சோ், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தொடங்கி வைத்தாா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில், மருத்துவா்கள் சுபா, ஆஷிமா, வீரபாண்டி, சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன், சமுதாய நல செவிலியா் லதா (எ) சொா்ணம், சுகாதார ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலக பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள், இடைநிலை சுகாதார பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT