கடையநல்லூா் நகராட்சியில் கழிவுநீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
நகா்மன்ற தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராசையா, ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துப்புரவு அலுவலா் இளங்கோ, துப்புரவு ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா ஆகியோா் கழிவுநீா் மேலாண்மை குறித்து விளக்கமளித்தனா். தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.