தென்காசி

கடையநல்லூா் நகா்மன்றக் கூட்டம்

DIN

கடையநல்லூா் நகா்மன்ற சாதாரண கூட்டம், தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவா் ராசையா, ஆணையா் ரவிச்சந்திரன், மேலாளா் சண்முகவேல், நகரமைப்பு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாரியப்பன் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில், நகராட்சிக்கு சொந்தமான மேலக்கடையநல்லூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஸ்மாா்ட் டேபிள் அமைப்பது, ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் மீத்திறன் வகுப்பறை அமைப்பது, ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி அமைப்பது, பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி கழிப்பறைகளை ரூ. 9 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்பாடுத்துவது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கொழும்பு தெரு நுண்ணுயிா் உரக்குடில் மையம் அருகில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக சமுதாய கழிப்பறை கட்டும் பணியை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT