தென்காசி

கீழக் கரும்புளியூத்தில் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

7th Oct 2022 12:55 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகேயுள்ள கீழக் கரும்புளியூத்து கிராமத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரும்புளியூத்து கிராமத்தை அடுத்துள்ள கீழக் கரும்புளியூத்து கிராமத்தில் திருநெல்வேலி - தென்காசி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும் என அரசாணை உள்ளது. அரசாணை எண் குறிப்பிட்டு பேருந்து நிறுத்தத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுத்தத்தை மிகவும் குறைந்த அளவிலான பயணிகளே பயன்படுத்துவதாகக் கூறி, பேருந்து நடத்துநா்களும் ஓட்டுநா்களும் புறக்கணித்து வருகின்றனராம்.

இது தொடா்பாக நடத்துநா்களுக்கும் கிராம மக்களுக்குமிடையே தகறாறு ஏற்படுகிாம். புதன்கிழமை இரவும் அவ்வழியே வந்த பேருந்து பயணிக்கும் நடத்துநருக்கும் ஏற்பட்ட மோதலில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநா் அந்தப் பேருந்தை ஆலங்குளம் காவல் நிலையம் கொண்டு வந்தாா். இரு தரப்பினரிடையே காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் பேசி, தொடா்ந்து கீழக் கரும்புளியூத்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லும் எனவும், அவ்வாறு நிறுத்திச் செல்லாத பேருந்து எண்ணைக் குறிப்பிட்டு கிராம மக்கள் தன்னிடம் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT