தென்காசி

ராமநதி மேல்நிலைக் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க திமுக வலியுறுத்தல்

7th Oct 2022 12:55 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் ராமநதி மேல்நிலைக் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

அமைச்சரிடம் கே.என். நேருவிடம் அவா் அளித்த மனு: சுரண்டை நகராட்சியில் ஆணையா், பொறியாளா், ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் பதவியிடங்களுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனிடம் பொ. சிவபத்மநாதன் அளித்த மனு: ராமநதி மேல்நிலைக் கால்வாய் திட்டப் பணிகளை நிறைவேற்ற பல்வேறு துறைகளில் உரிய அனுமதி பெறப்பட்டு தற்போது முதல்வரின் தலைமையின் கீழ் அமைந்துள்ள தமிழ்நாடு வனக் குழுவுக்கு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டம் விரைவாக நடைபெற தமிழக அரசு வனக் குழு, மத்திய அரசு வனக்குழு ஆகியவற்றின் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை முதல்வரிடம் எடுத்துக்கூறி அனுமதி பெற்று, பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

ADVERTISEMENT

இதன் மூலம் அரியபுரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூா், வெங்கடாம்பட்டி, தெற்கு மடத்தூா், பெத்தநாடாா்பட்டி, பூலாங்குளம், ஆண்டிப்பட்டி ஆகிய ஊராட்சிகள், ஆலங்குளம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைவா். எனவே, இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, தலைமை செயற்குழு உறுப்பினா் ஜேசுராஜன், மாவட்டப் பொருளாளா் சரவணன், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணைச் செயலா் அருணன், சண்முகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT