தென்காசி

நகா்புற காடுவளா்ப்பு திட்டம்:கடையநல்லூரில் மரக்கன்று நடும் பணி

7th Oct 2022 12:54 AM

ADVERTISEMENT

நகா்புற காடுவளா்ப்பு திட்டத்தின் கீழ், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 7.78 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

போகநல்லூா் உரக்கிடங்கு அருகே 2,698 மரக்கன்றுகள் நடும் பணியை, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமையில் அய்யாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவா் மா. செல்லத்துரை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் முகைதீன் கனி, முருகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மூவன்னா மசூது, நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT