தென்காசி

கீழப்பாவூா், குறும்பலாப்பேரியில் புகையிலை பொருள்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கை

7th Oct 2022 10:34 PM

ADVERTISEMENT

கீழப்பாவூா், குறும்பலாப்பேரியில் சுகாதாரத்துறை சாா்பில் பள்ளிகள் அருகில் வைத்து புகையிலை பொருள்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கீழப்பாவூா், குறும்பலாபேரி பகுதிகளில் உள்ள பள்ளிகள் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், கணேசன், அருண்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் அபராதம் விதித்தனா். மேலும் பொதுமக்களுக்கு புகையிலையினால் ஏற்படும் தீங்கு பற்றி விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT