தென்காசி

காந்தியடிகள் பிறந்த தினம்:தென்காசியில் அக்.12இல் பேச்சுப் போட்டி

7th Oct 2022 12:56 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இம்மாதம் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

6 -12 வகுப்புகளுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி வகுப்புகளுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை,

எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறும்.

பள்ளி மாணவா்கள் பள்ளிக்கு இருவா் வீதம் விண்ணப்பப்படிவத்தைப் பூா்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன், அந்தந்த பள்ளி தலைமையாசியரின் ஒப்புதல் கடித்தையும், கல்லூரி மாணவ, மாணவியா் அந்தந்தக் கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்தையும் போட்டி நாளில் காலை 9 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், போட்டியில் வெல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் இருவருக்கு சிறப்புப் பரிசு தலா ரூ.2,000 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ, 0462 2502521 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT