தென்காசி

தென்காசியில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Oct 2022 12:56 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தென்காசி கே.ஆா்.காலனியில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டுமானப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை மாதம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை கொடுத்து 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். குருசாமி, மாரிராஜன், ஆா். முருகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் வன்னியபெருமாள் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்டப் பொருளாளா் தா்மராஜ், மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் குருசாமி, பீடி சங்க மாவட்டத் தலைவா் மகாவிஷ்ணு, மாவட்டச் செயலா் அய்யப்பன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் லெனின்குமாா் நிறைவுரையாற்றினாா். எஸ். முருகையா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT