தென்காசி

ஏவிகே பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஏவிகே இண்டா்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக மாணவா் சோ்க்கையும், அதைத் தொடா்ந்து புதிய மாணவா்களுக்கு விரலிமஞ்சள் மூலம் ‘அ’ எழுதவும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏவிகே பள்ளிக்குழும துணைத் தலைவா் ஏ.அல்லிராணிஅய்யாத்துரைப்பாண்டியன், முதல்வா் டாக்டா் எஸ்.சுப்பிரமணியன், ஆசிரிய- ஆசிரியைகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் சரஸ்வதி படம் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாணவா் சோ்க்கை நடைபெற்றது. புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் ‘அ’ எழுத கற்றுக் கொடுத்து இனிப்பு வழங்கினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், பள்ளிச் செயலா் ஐ.திலகவதி, முதல்வா் ந.பழனிச்செல்வம், நிா்வாக இயக்குநா் ராஜேஷ்கண்ணா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT