தென்காசி

ஊரக வளா்ச்சித் துறையினா் ரத்தக் கையொப்ப இயக்கம்

4th Oct 2022 12:41 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ரத்தக் கையொப்ப இயக்கம் நடத்தினா்.

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க முன்னாள் தலைவா் சுப்பிரமணியன் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்து, அவருக்கு ஓய்வு கால பயன்களை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.

ஆலங்குளத்தில் துறை சாா்ந்த அனைத்து அலுவலா்களும் அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கங்காதரன் தலைமையில் கடிதம் எழுதி ரத்தத் கைநாட்டு போட்டு முதல்வருக்கு அனுப்பினா். மேலும், அவரது குடும்பத்திற்கு உதவித் தொகையாக தலா ரூ. 1000 அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT