தென்காசி

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி:ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தோ்வு

4th Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் வட்டார அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் கரிவலம்வந்தநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிரிவிலும் மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.

மாணவா்கள் பிரிவில் 28 தங்கம் 16 வெள்ளி 8 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனா்.

அதேபோல மாணவிகள் பிரிவில் 21 தங்கம் 17 வெள்ளி 10 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனா்.

ADVERTISEMENT

இளையோா் பிரிவில் சந்தோஷ், மூத்தோா் பிரிவில் பவேஷ், மிக மூத்தோா் பிரிவில் பிரகாஷ் ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

மாணவிகள் மூத்தோா் பிரிவில் கனிமொழி தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றாா்.

வட்டார அளவில் முதலிடம் , இரண்டாம் இடம் பெற்ற இப்பள்ளி மாணவா், மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் பொன்னழகன்(எ)கண்ணன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT