தென்காசி

இலஞ்சி பள்ளியில் உலக இதய தினவிழா

4th Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

தென்காசியில் உலக இதய தினவிழா கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனை, தென்காசி மீரான் மருத்துவமனை மற்றும் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் பள்ளி சாா்பில் உலக இதய நோய் விழிப்புணா்வு விழா நடைபெற்றது.

இலஞ்சி பாரத் மெட்ரிக் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆரோக்கியமான இதயத்திற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதத்தில் மாணவா்கள் ஒன்றிணைந்து இதய வடிவில் நின்று வலியுறுத்தினா்.

விழாவில் இதய நோய் குறித்தும், உடற்பயிற்சி, ஆரோக்கியத்திற்கான உணவு பழக்கங்கள் குறித்து மீரான் மருத்துவமனையின் இயக்குனா் மருத்துவா் முகம்மது மீரான் பேசினாா்.

மீரான் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் அப்துல் அஸீஸ், இலஞ்சி பாரத் கல்விகுழுமங்களின் தலைவா் மோகனகிருஷ்ணன்,செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனையின் பொது மேலாளா் சரவணன், மேலாளா்கள் ஐயப்பன், முத்துக்குமரன், செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT