தென்காசி

நல்லூா் ஊராட்சியில் வறுமைக்கோடு பட்டியல்: கிராம சபையில் தீா்மானம்

4th Oct 2022 12:41 AM

ADVERTISEMENT

நல்லூா் ஊராட்சியில் ஏழை, எளிய மக்களை வறுமைக்கோடு பட்டியலில் இணைக்க வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் சிம்சன் தலைமை வகித்தாா். தென்காசி உபகோட்ட உதவிச் செயற்பொறியாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். வரவு- செலவு கணக்குகளை செயலா் அந்தோணி வாசித்தாா். நல்லூா் ஊராட்சியில் ஏழை, எளிய பொதுமக்களை வறுமை கோட்டின் கீழ் உறுப்பினராக சோ்க்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவா் லட்சுமி, அனைத்துத் துறை அதிகாரிகள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT