தென்காசி

ஆய்க்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்இலவச சைக்கிள் வழங்கல்

4th Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து 74 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் முத்துகுட்டி, அச்சன்புதூா் பேரூராட்சித் தலைவா் டாக்டா் சுசீகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் முத்துலட்சுமி ஆகியோா் பேசினா்.

ஆசிரியா் முல்லைவேந்தன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா் ஞானராஜ் வரவேற்றாா்.

ADVERTISEMENT

உதவி தலைமையாசிரியா் டேவிட் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT