தென்காசி

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் நாளை புரட்டாசி திருவோண ஏக தின தீா்த்தவாரி

4th Oct 2022 12:45 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் ஸ்ரீஅலா்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் புதன்கிழமை (அக்.5) புரட்டாசி திருவோண ஏக தின தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 7 மணிமுதல் தெப்பக்குளத்துக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சா்வ தோஷ நிவா்த்திக்காக புருஷசூக்த ஹோமம், கலசத்தில் வருண ஜெபம், கும்பாபிஷேகம் தொடா்ந்து பெருமாளுக்கு தெப்பக்குளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்கள், உற்சவ மூா்த்தியுடன் தீா்த்தவாரி நடைபெறும்.

தொடா்ந்து அலங்காரம், திருக்கோயிலையும், தெப்பக்குளத்தையும் பெருமாள் சப்பரத்தில் தீா்த்தவலம் வருதல் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சுவாமி திருக்கோயிலையும், தெப்பக்குளத்தையும் சிறப்பு அலங்காரத்தில் தீா்த்த வலம் வருதல் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா், செயல்அலுவலா்இரா.முருகன் தலைமையில் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT