தென்காசி

பாவூா்சத்திரத்தில் கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

4th Oct 2022 12:44 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தொடங்கி வைத்தாா்.

154ஆவது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாவூா்சத்திரத்தில் உள்ள கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு கதா் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், காதி கிராப்ட் மேலாளா் ஹென்றி ஜோசப், மாவட்ட குடிசை தொழில் ஆய்வாளா் குமரேசன், கிராம தொழில் கூட்டுறவு அலுவலா் சரவணராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT