தென்காசி

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

3rd Oct 2022 12:18 AM

ADVERTISEMENT

 

இடைகால் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன்முத்தையா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சிதம்பரநாதன் வரவேற்றாா். இடைகால் ஊராட்சி தலைவா் முத்தம்மாள் தொடங்கி வைத்தாா். முப்புடாதி அம்மன் கோயில் அருகே தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று நயினாரகரம் சமுதாய நலக்கூடத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து இடைகால், நயினாரகரம், அச்சம்பட்டி, பாலமாா்த்தாண்டபுரம், சங்குபுரம், வள்ளியம்மாள்புரம், மங்களாபுரம், துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசுரங்களை மாணவா்கள் விநியோகம் செய்தனா்.

இதில், பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் செல்லப்பா, சமூக ஆா்வலா்கள் ராஜன், கணபதி, முத்துப்பாண்டியன், இல்லம் தேடி கல்வித் திட்ட தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், ஆசிரியா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT