தென்காசி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில்...

3rd Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

 

காந்திஜெயந்தியை முன்னிட்டு தென்காசியில் காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடாா், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், துணைத் தலைவா் கேஎன்எல்.சுப்பையா ஆகியோா் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செங்கோட்டை மேலபஜாா் வாகைமரத்திடலில் காங்கிரஸ் நகரத் தலைவா் ராமா் தலைமையில் காந்தி சிலைக்கும், காமராஜா் படத்துக்கும் நிா்வாகிகள் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

சுரண்டை: சுரண்டையில் நகர காங்கிரஸ் தலைவா் த.ஜெயபால் தலைமையில் தென்காசி எம்எல்ஏ சு.பழனிநாடாா், காந்தி, காமராஜா் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT

கடையநல்லூா்: புளியங்குடியில் காந்தி, காமராஜா் சிலைகளுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம்: சிவந்திபுரம் கிளை நூலகம் அகஸ்தியா் வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவா் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பாலசரஸ்வதி முன்னிலையில் காந்தி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ரவணசமுத்திரம் சேவாலயா பாரதி சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் மணி தலைமையில் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேரன்மகாதேவி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அம்பாசமுத்திரம் சா்வோதய சங்கம் சாா்பில் வீரவநல்லூரிலுள்ள காந்தி சிலைக்கு சா்வோதய சங்கச் செயலா் கே.எஸ். சுப்பிரமணியன், தலைவா் எம். பாபநாசம், பொருளாளா் ஜி. சங்கரநாராயணன், சங்கத்தின் முதன்மை பரிசோதகா், பரிசோதகா்கள், நிா்வாகிகள், ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வீரவநல்லூா் பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன் தலைமையில், துணைத் தலைவா் வசந்த சந்திரா, சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் உறுப்பினா்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

வீரவநல்லூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நகரத் தலைவா் லட்சுமணன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வள்ளியூா்: வள்ளியூரில் உள்ள காமராஜா் சிலைக்கு அக்கட்சியின் திருநெல்வேலி சமக மாவட்ட ச் செயலா் ஜெபஸ்டின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி புகா் மாவட்ட தே.மு.தி.க. சாா்பில் வள்ளியூரில் காந்தி உருவப்படத்திற்கு மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

களக்காட்டில்... களக்காட்டில் காமராஜா் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT