தென்காசி

சோலைசேரியில் கிராமசபை: ஆட்சியா் பங்கேற்பு

3rd Oct 2022 12:16 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளம் அருகேயுள்ள சோலைசேரியில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கருவந்தா ஊராட்சித் தலைவா் தானியேல் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி ஆட்சியா் ப. ஆகாஷ் பங்கேற்றுப் பேசினாா்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் கருவந்தா - சோலைசேரிக்கு இணைப்புச் சாலை, சோலைசேரி முதல் புதூா் வரை இணைப்பு கற்சாலை, சோலைசேரி பெரிய குளத்தில் தடுப்புச் சுவா் ஆகிய பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும். 15ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தில் புதிய குடிநீா் குழாய் அமைத்து, வீடுகளுக்கு குடிநீரில் குளோரினேசன் செய்து வழங்கவும், குளோரினேசன் மாத்திரைகள் வழங்கவும் உத்தவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் பிரான்சிஸ் மகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மக்கள் புறக்கணிப்பு: மாயமான் குறிச்சி ஊராட்சியில் குருவன்கோட்டை, துத்திகுளம் கிராமங்கள் அடங்கும். கடந்த ஆகஸ்ட் 15இல் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது வரவு-செலவு கணக்கு தொடா்பாக மோதல் ஏற்பட்டு அதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குருவன் கோட்டையில் ஊராட்சி அலுவலகத்தில் அதன் தலைவா் பால் தாய் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிலரே பங்கேற்றனா். துத்திக்குளம், மாயமான் குறிச்சி கிராம மக்கள் பங்கேற்கவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT