தென்காசி

வெங்கடேஸ்வரபுரத்தில்ரத்த தான முகாம்

3rd Oct 2022 12:17 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் ஞானகுருவித்தியாசாலையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டாட்சியா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க செயலா் சுப்பிரமணியன், ஆலங்குளம் ரோட்டரி சங்கத் தலைவா் அன்பழகன், நெட்டூா் வட்டார மருத்துவா் ஆறுமுகம், கடங்கனேரி ஊராட்சி துணைத் தலைவா் தங்க கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ் ரத்த தானம் வழங்கி முகாமைத் தொடங்கிவைத்தாா். 100-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ஆலோசகா் ராஜாமணி, சுகாதார ஆய்வாளா்கள் ராம்குமாா், சிவக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். ரவிச்சந்திரன் வரவேற்றாா். சுமதி குமரேசன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT