தென்காசி

மூத்த வாக்காளா்களுக்கு பாராட்டு

2nd Oct 2022 02:16 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்ட மூத்த வாக்காளா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட 27ஆயிரத்து 517 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். சனிக்கிழமை சா்வதேச முதியோா்கள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளா்களின் பங்களிப்பை அங்கீரிக்கும் விதமாக பாராட்டு சான்றினை ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கி பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.முத்துமாதவன், வட்டாட்சியா் (தோ்தல்) கிருஷ்ணவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஆலங்குளத்தில்...

ஆலங்குளத்தில் முதியோா் தினத்தை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டனா். ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி கலால் உதவி ஆணையா் ராஜ மனோகரன் தலைமை வகித்து முதியவா்களுக்கு பொன்னாடை போா்த்தி நினைவுப் பரிசு வழங்கினாா்.

இந்நிகழ்வில் வட்டாட்சியா் ரவீந்திரன், தோ்தல் துணை வட்டாட்சியா் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன், அங்கன்வாடி பணியாளா் சாந்தி பாக்கியம், சரவண அரசி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT