தென்காசி

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

2nd Oct 2022 02:15 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே காணாமல் போன மூதாட்டி சுடலமாக மீட்கப்பட்டாா்.

ஊத்துமலை அருகே உள்ள குறிச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகத்தாய் (70). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்று கூறப்படுகிறது. சோலைசேரி கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றவா் வீடு திரும்பவில்லையாம். கடந்த மூன்று நாள்களாக மூதாட்டியை உறவினா்கள் தேடி வந்த நிலையில், சோலைசேரியில் உள்ள கிணறு ஒன்றில் மூதாட்டியின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்புத் துறையினா் சென்று மூதாட்டி சடலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா்.

இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT