தென்காசி

புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

2nd Oct 2022 02:15 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தடை செய்யப்பட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பூலாங்குளம் கிராமத்தில் அதிக அளவில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். தா்மலிங்கம் மகன் ஆதிநாராயணன் (38) என்பவா் தனது கடை மற்றும் தோட்டங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT