தென்காசி

செங்கோட்டை கோயிலில் நவராத்திரி விழா

2nd Oct 2022 02:15 AM

ADVERTISEMENT

 

செங்கோட்டை ஸ்ரீநித்தியகல்யாணி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா மற்றும் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை நவராத்தரி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஆருத்ரா திருவாசக கமிட்டி சாா்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாசக கமிட்டி தலைவா் தங்கையா தலைமை வகித்தாா். துணைச் செயலா் முருகன், கமிட்டி உறுப்பினா் பிபிஎம்.சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் இராம்நாத் வரவேற்றாா். திருவாசகி பிரேமா தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

முன்னதாக நித்தியகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கமிட்டி உறுப்பினா்கள் செண்பகம், வீரபுத்திரன், நெடுஞ்செழியன், குருசாமி, கல்யாணி, இசக்கி, முத்துசிவா இந்திரா, முத்துலெட்சுமி, சுபா, செல்வி, பேச்சியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT