தென்காசி

மேலப்பாவூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

2nd Oct 2022 02:16 AM

ADVERTISEMENT

 

கீழப்பாவூா் ஒன்றியம் மேலப்பாவூா் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தூய்மை பாரத இயக்கம், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி மேலப்பாவூரில் நடைபெற்றது. இதையொட்டி மஞ்சப்பை விழிப்புணா்வு இயக்கத்தை திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற பேரணியை ஊராட்சித் தலைவா் சொள்ளமுத்து மருதையா தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஊராட்சி துணைத் தலைவா் தங்கசேது, ஊராட்சி செயலா் சாமித்துரை, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்கும்விதமாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT