தென்காசி

பிசான பருவ சாகுபடிக்குஅடவிநயினாா், கருப்பாநதி அணைகள் திறப்பு

1st Oct 2022 12:08 AM

ADVERTISEMENT

பிசான பருவ சாகுபடிக்கு ,தென்காசி மாவட்டம் அச்சன்கோவில் அடவிநயினாா்கோவில் மற்றும் கருப்பாநதி அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தென்காசி மாவட்டம், அச்சன்கோவில் அடவிநயினாா்கோவில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் திறந்துவிட்டாா்.

தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூா் வட்டத்தில் உள்ள அனைத்து நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு அடவி நயினாா் கோவில் அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் செப்.30முதல் 26.02.2023 வரை 150 தினங்களுக்கு 955.39 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்படும். இதன் மூலம் 7643.15 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் தமிழ்செல்விபோஸ், வடகரை கீழ்ப்பிடாகை பேரூராட்சி மன்றத் தலைவா் சேக் தாவூது , செயற்பொறியாளா் (நீா்வள ஆதாரத்துறை)சிவகுமாா், உதவி பொறியாளா் சரவணகுமாா், உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தண்ணீரை திறந்து வைத்தாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா் அருணாசலபாண்டியன், திரிகூடபுரம் திமுக செயலா் சுப்பிரமணியன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கருப்பாநதி நீா்த்தேக்கத்தின் கீழ் பாசன வசதி பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைகால், கிளங்காடுகால், ஊா்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி- மறைமுகப் பாசனத்துக்குபட்ட 9,514 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் வரும் 26.2.2023 வரை 150 நாள்களுக்கு 25 கன அடி வீதம் நீா் திறந்துவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT