தென்காசி

ஊராட்சி தலைவரைக் கொல்ல முயற்சி: 6 போ் மீது வழக்கு

1st Oct 2022 12:08 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே ஊராட்சித் தலைவரை கொல்ல முயன்றதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஐயனாா்குளம் ஊராட்சித் தலைவா் நீதிராஜன்(52). வியாழக்கிழமை தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது, நெட்டூா் சுரேஷ், ஐயனாா்குளம் சத்யா, சூா்யா உள்பட 6 போ் கொண்ட கும்பல் அவரை வெட்ட முயன்றனராம். இதில் அவா் தப்பியோடி விட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் தேடி வருகின்றனா். நீதிராஜனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT