தென்காசி

தென்காசி தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளருக்கு வரவேற்பு

1st Oct 2022 12:07 AM

ADVERTISEMENT

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட பொ.சிவபத்மனநாதன், ஆலங்குளத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தபோது, அவருக்கு மேள தாளங்கள் முழங்க திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, அம்பாசமுத்திரம் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊா்வலமாக வந்த அவா், அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றிய திமுக செயலா்கள் செல்லதுரை, அன்பழகன், அரசு ஒப்பந்ததாரா்கள் மாரிதுரை, மணிகண்டன், ராமகிருஷ்ணன், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை அமைப்பாளா் அருணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT