தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அக்.2, 9இல் மதுக் கடைகள் மூடல்

1st Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் அக்.2 மற்றும் 9 ஆகிய இரு தினங்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியா் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

அக்.2இல் காந்தி ஜெயந்தி, அக்.9இல் மிலாடி நபி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுக் கூடங்கள் இரண்டு தினங்களும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT