தென்காசி

ஆலங்குளம், தென்காசியில் இன்று மின்தடை

1st Oct 2022 12:08 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஊத்துமலை பகுதியில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (அக்.1) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலங்குளம் ஊத்துமலை, கீழப்பாவூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள் புரம், கழுநீா்குளம், அடைக்கலபட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் தடை படும்.

தென்காசி பகுதியில்.. தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவா்வடகரை துணை மின் நிலையங்களில் அக்.1 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தென்காசி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா், இராமசந்திரபட்டினம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், கரிசல், வல்லம், கற்குடி, புளியறை, தெற்குமேடு, பூலான்குடியிருப்பு, புதூா், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான சுரண்டை, இடையாா்தவணை, குலையநேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூா், வாடியூா், கழுநீா்குளம், ஆனைகுளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான சாம்பவா்வடகரை, சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊா்கள் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT