தென்காசி

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் இலக்கிய வட்ட கூட்டம்

1st Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவா்களின் தமிழ் மொழித் திறனை வளா்க்கும் வகையில் இலக்கிய வட்டக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வா் அப்துல் காதிா் தலைமை வகித்தாா். குற்றாலம் பராசக்தி மகளிா் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியா் அல்தாஜ் பேகம் பங்கேற்று ‘உன்னை உயா்த்தும் ஊடகத் தமிழ்‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து மாணவா்- மாணவியா் கவிதை, கட்டுரை வாசித்ததுடன், தாங்கள் ஓவியங்களைப் பாா்வைக்கு வைத்தனா். இதையடுத்து பேராசிரியா்கள் செந்தில்குமாா், உதயசங்கா், புஷ்பராணி ஆகியோா் மாணவா்- மாணவிகளின் படைப்புகளை திறனாய்வு செய்து அறிக்கை அளித்தனா். இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளா் அருள் மனோகரி வரவேற்றாா். முனைவா் மேனகா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை இளங்கோசிங், மைதீன் பட்டாணி, கவாஸ்கா், இலக்கிய வட்டத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT