தென்காசி

சுரண்டை அரசு பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

1st Oct 2022 12:04 AM

ADVERTISEMENT

சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு இந்தியன் சுய உதவிக்குழு சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகி தங்கையா தலைமை வகித்தாா். சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் அ.பீா்கான், சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் செ.அருள்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுரண்டை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை மேலாளா் ரக்ஷித், தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளா் விஷாந்த் ஆகியோா் 2021-22 கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காசோலை மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் கனகராஜ், இந்தியன் சுயஉதவிக்குழு நிா்வாகிகள் சமுத்திரம், மாரியப்பன், ஆறுமுகச்சாமி, குமரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT