தென்காசி

நல்லூா் மாணவா்கள் போதை விழிப்புணா்வுப் பேரணி

30th Nov 2022 01:51 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் போதை தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் வசந்தி ஜான்சிராணி தலைமை வகித்தாா். நல்லூா் ஊராட்சித் தலைவா் சிம்சோன் பேரணியைத் தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் வில்லியம் பீட்டா் ராஜ், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்ப்பது மற்றும் கடைகளுக்கு செல்லும் போது துணிப் பையை எடுத்துச் செல்ல பொதுமக்களை வலியுறுத்துவது குறித்து விளக்கினாா்.

பேரணியில், உதவித் தலைமையாசிரியை ரோதா கேசரி, ஆசிரியா்கள் சாமுவேல் பாஸ்கா், செல்வன், சுந்தா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் செல்வகுமாா், மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT